பலவுள் தெரிக :
1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் ?
அ) எந் + தமிழ் + நா
ஆ) எந்த + தமிழ் + நா ஈ) எந்தம் + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா
[விடை: இ) எம் + தமிழ் + நா]
குறுவினா :
1. "மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
விடை :
* சீவக சிந்தாமணி,
* வளையாபதி, • குண்டலகேசி
இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்.
சிறுவினாக்கள்:
1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
"அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!"
* அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
* பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
* குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
* பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
* பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
* கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
* பொங்கியெழும் நினைவுகளால் தலைபணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்.
"முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!"